இந்தியா

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து

Published On 2022-11-09 15:36 IST   |   Update On 2022-11-09 15:36:00 IST
  • உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட்டிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • எதிர்காலத்தில் நம் சமூகத்தில் சட்டம் மற்றும் நீதியை வெற்றிகரமாக நிலைநிறுத்த வாழ்த்துகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட்டிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், " உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டி.ஒய்.சந்திர சூட் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நம் சமூகத்தில் சட்டம் மற்றும் நீதியை வெற்றிகரமாக நிலைநிறுத்த வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News