இந்தியா

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- பீதியில் மக்கள்

Published On 2022-08-26 10:35 GMT   |   Update On 2022-08-26 10:35 GMT
  • நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை.
  • கடந்த 4 நாட்களில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரெசி மாவட்டத்தில் உள்ள கட்ர பெல்ட்டில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு 3.4 என்கிற ரிக்டர் அளவிலும் மற்றொன்று டோடா மாவட்டத்தில் அதிகாலை 4.07 மணிக்கு 2.8 ரிக்டர் அளவில் 40 நிமிட இடைவெளியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

காட்ரா, டோடா, உடம்பூர் மற்றும் கிஷ்டவார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News