இந்தியா
கவர்னருக்கு எதிரான வழக்கு- தமிழக அரசு கூடுதல் அவகாசம் கேட்டு முறையீடு
- சுப்ரீம் கோர்ட் இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியது.
- மற்ற மூத்த வக்கீல்கள் சார்பில் வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.
புதுடெல்லி:
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு கடந்த 10-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி, எழுத்து மூலமான வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியது.
எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழ்நாடு அரசு வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மற்ற மூத்த வக்கீல்கள் சார்பில் வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.