இந்தியா

விவசாயிகளுக்காக போராடியவரை தவறாக பேசிய கங்கனா.. அவதூறு வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2025-09-12 14:05 IST   |   Update On 2025-09-12 14:05:00 IST
  • இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்.
  • நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்

2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், "உங்கள் அறிக்கைகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது வெறும் ரீ ட்வீட் அல்ல. நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்" என்று கூறி கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Tags:    

Similar News