இந்தியா

வக்பு மசோதாவுக்கு ஆதரவு: பாஜக சிறுபான்மை தலைவர் வீட்டுக்கு தீ வைப்பு - வீடியோ

Published On 2025-04-07 06:29 IST   |   Update On 2025-04-07 06:29:00 IST
  • பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவராக அஸ்கர் அலி உள்ளார்.
  • பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த நிறைவேறியது. ஜனாதிபதியின் உடனடி ஒப்புதலுடன் சட்டமாகவும் மாறியது. இந்நிலையில் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர் பாஜக சிறும்பான்மை தலைவரின் வீட்டில் தீவைத்து எரிக்கப்பட்டது.

மணிப்பூரில், பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநிலத் தலைவர் அஸ்கர் அலி நேற்று முன் தினம் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் நேற்று கும்பல் ஒன்று பவம் தௌபல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு தீவைத்துள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்கு வெளியே திரண்ட கும்பல் வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அலி இணைய ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர் தனது முந்தைய கூற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.

முன்னதாக, இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் வக்பு மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. பேரணியில் ஐயாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.இத்தகடுத்து முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News