இந்தியா

டெல்லியில் புழுதிப் புயல்- விமான சேவை பாதிப்பால் பயணிகள் அவதி

Published On 2025-04-12 08:55 IST   |   Update On 2025-04-12 08:55:00 IST
  • மரங்கள் முறிந்து வாகனங்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
  • கடும் சிரமத்திற்கு உள்ளான பயணிகள் தங்களது அனுபவங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

இந்தியாவின் தலைநகரமான டெல்லி சமீப காலமாக காற்று மாசு, கடும் குளிர் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியது.

இதில் மரங்கள் முறிந்து வாகனங்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் புழுதிப் புயலின் போது, மதுவிகார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே புழுதிப் புயல் காரணமாக விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 12மணி நேர விமான தாமதத்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்னர். மேலும் 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளான பயணிகள் தங்களது அனுபவங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். 



Tags:    

Similar News