இந்தியா

கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக லட்டு: பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published On 2025-03-31 10:52 IST   |   Update On 2025-03-31 10:52:00 IST
  • ஒரு லட்டு சுமார் 20 கிராம் எடை கொண்டதாக உள்ளது.
  • லட்டுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் விசேஷமானது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக லட்டு தயார் செய்து வருகின்றனர்.

இந்த லட்டுகள் ஆதிவாசி கூட்டுறவு சங்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு கர்ப்பிணி பெண்களை பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு லட்டு சுமார் 20 கிராம் எடை கொண்டதாக உள்ளது. செம்பருத்தி பூக்கள், வெல்லம், திராட்சை நல்லெண்ணெய் ஆகியவற்றை கொண்டு இந்த லட்டுகள் தயார் செய்யப்படுகிறது.

சத்தான இந்த லட்டுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் விசேஷமானது என்பதால் தெலுங்கானாவில் அதிகளவில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும் 20 குவிண்டால் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.

இந்த லட்டு தயாரிக்கும் பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆதிவாசி மகிளா சங்கத் தலைவர் குமராம் பகுபாய் கூறுகையில்:-

பிரதமர் மோடியின் பாராட்டு மகிழ்ச்சியை தருகிறது. எதிர்காலத்தில் அதிக ஆர்வத்துடன் கர்ப்பிணிகளுக்கான லட்டு தயாரிக்கும் தொழிலை விரிவுபடுத்த கடுமையாக உழைப்போம் என்றார்.

Tags:    

Similar News