இந்தியா

கேரளாவில் விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை - தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2025-05-24 10:30 IST   |   Update On 2025-05-24 12:12:00 IST
  • மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும்.
  • கேரளா கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா மற்றும் கொங்கன், கோவா ஆகிய இடங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். அப்போது கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்யும். இது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும்.

முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் நீலகிரி, குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும்.

தென்மேற்கு பருவமழை இந்த மாதம் 27-ந்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. பின்னர் தென்மேற்கு பருவமழை அதற்கு முன்னதாகவே தொடங்கி விடும் என்று அறிவிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதன் அறிகுறியாக தற்போதே பல மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா மற்றும் கொங்கன், கோவா ஆகிய இடங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.

தமிழ்நாடு, வடக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் மிக கனமழையும், குஜராத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News