இந்தியா

பாம்பை பிடித்துச் சென்ற ஊழியர்கள்

கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு- அதிர்ச்சியடைந்த வீரர்கள்

Update: 2022-10-02 15:45 GMT
  • பாம்பிடம் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு வீரர்கள் சென்றனர்.
  • பாம்பு நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

கவுகாத்தி:

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியின் 7-வது ஓவரின்போது மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நடுவரிடம் தெரிவித்தனர். 


மேலும் பாம்பு இருந்த பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு அவர்கள் சென்றனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. உடனடியாக விரைந்து வந்த மைதான பராமரிப்பாளர்கள், கம்பி ஒன்றின் உதவியுடன் பாம்பை பிடித்து சென்றனர். இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

Tags:    

Similar News