இந்தியா

வாக்காளர் அரசை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அரசு வாக்காளர்களை தேர்ந்தெடுப்பதே SIR - நிர்மலா சீதாராமன் கணவர்

Published On 2025-11-23 14:57 IST   |   Update On 2025-11-23 14:57:00 IST
  • பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.
  • NRC,CAA ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.

தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR)  மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வாக்காளர்கள் அரசாங்கத்தை தேர்தெடுக்கும் நிலை மாறி அரசாங்கம் வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் முறையே SIR என்று பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான பராகலா பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். இவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆவார்.

மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "SIR-ன் முக்கிய நோக்கம், தங்கள் பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.

அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் என்ற நிலையை மாற்றி, வாக்காளர்களை அரசாங்கமே தேர்ந்தெடுக்கும் செயல். 

தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA) ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.

வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும்போது, அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுகிறார்கள். இதுவே SIR-ன் அடிப்படை இலக்கு.  ஒடுக்கப்பட்ட, கல்வியறிவற்ற, சிறுபான்மையின மக்கள் பெயர்களை நீக்குவதே SIR-ன் இலக்கு.

இதற்கு அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் ஓர் உதாரணம். ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களின் பெயர்கள் மட்டுமே SIR மூலம் தக்கவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் அங்கே சில இடங்களில் வெற்றிபெற்றதே ஆச்சரியம்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News