இந்தியா

இந்திய வீரரின் விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு

Published On 2025-06-22 05:41 IST   |   Update On 2025-06-22 05:41:00 IST
  • இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் நாடு திரும்பினர்.
  • இந்திய வீரரின் விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' மனித விண்வெளி பயணத்திற்கான 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது.

இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்தனர். பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் நாடு திரும்பி உள்ளனர் என நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News