இந்தியா
ஜம்மு காஷ்மீர் ஆம் ஆத்மி எம்எல்ஏவின் அதிர்ச்சி முடிவு: உமர் அப்துல்லா அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ்
- தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார்.
- மாலிக் இந்த ஆண்டு மார்ச் 21 அன்று ஆம் ஆத்மியின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரே ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக், தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார்.
மாலிக் தனது முடிவை X தளத்தில் வெளியிட்டு, ஜம்மு-காஷ்மீர் மக்களின் நம்பிக்கை மற்றும் நலன் எப்போதும் எனது முன்னுரிமையாக இருக்கும் என்பதால், எனது மக்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த முடிவு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கடந்த ஆண்டு தோடா தொகுதியில் பாஜகவை தோற்கடித்து இவர் ஆம் ஆத்மியின் முதல் எம்எல்ஏ ஆனார். மாலிக் இந்த ஆண்டு மார்ச் 21 அன்று ஆம் ஆத்மியின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.