இந்தியா

ஊழல், பயத்தின் காரணமாக உருவானது ஷிண்டே அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2022-11-14 03:10 GMT   |   Update On 2022-11-14 03:10 GMT
  • ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
  • மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர்.

நாந்தெட் :

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உருவான மகா விகாஸ் அகாடி ஆட்சி, சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியின் அதிருப்தியால் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 40 பேரின் உதவியுடன், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். இந்த ஆட்சியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் நாந்தெட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறியதாவது:-

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஏன் இன்னும் மந்திரி சபையை விரிவாக்கம் செய்யவில்லை? ஏன் என்றால் அவ்வாறு செய்தால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். ஊழல் மற்றும் அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஒரு மந்திரி 6 மாவட்டங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். என்ன நடக்கிறது எந்த மராட்டியத்தில்?.

முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சியை முதல்-மந்திரி ஏக்நாத் ஷண்டே தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் அவர் உள்பட தற்போது பதவியில் உள்ள பல மந்திரிகளும் மகா விகாஸ் அகாடி அரசின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் தற்போது 18 மந்திரிகள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதாவில் தலா 9 மந்திரிகள் உள்ளனர்.

மாநிலத்தில் அதிகபட்சமாக 43 மந்திரிகள் வரை இருக்கலாம்.

Tags:    

Similar News