செப்டம்பர் மாத GST ரூ.1.89 லட்சம் கோடி வசூல்
- ஆகஸ்ட் மாதம்- ரூ.1.86 லட்சம் கோடி வசூல்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கடந்த மாதத்துடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.
இதற்கிடையே, ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் எதிரொலி அடுத்த மாத ஜிஎஸ்டி வசூலில் தெரியவரும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் ரூ.10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.