இந்தியா
ராஜஸ்தானில் அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - 4 மாணவர்கள் பலி
- ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
- பாழடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பள்ளி இன்று காலை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பாழடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்து ஜலாவர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி அமித் குமார் புடானியா சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பள்ளியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.