இந்தியா

உத்தவ் தாக்கரே அணிக்கு புதிய சின்னம் ஒதுக்குவது புரட்சியை ஏற்படுத்தும்: சஞ்சய் ராவத்

Published On 2022-10-11 02:42 GMT   |   Update On 2022-10-11 02:42 GMT
  • தற்போது மகாராஷ்டிராவில் அதிகம் வெறுக்கப்படும் நபர் ஏக்நாத் ஷிண்டே.
  • கட்சியின் சின்னம் முடக்கப்படுவது புதிதல்ல.

மும்பை :

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று நீதிமன்ற காவல் முடிந்து மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிவசேனாவின் வில், அம்பு சின்னம் முடக்கப்பட்டது குறித்து சஞ்சய் ராவத்திடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு புதிய சின்னம் ஒதுக்கப்படுவது பெரிய புரட்சியை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழலில் கட்சியின் சின்னம் முடக்கப்படுவது புதிதல்ல. காங்கிரசின் சின்னம் கூட முடக்கப்பட்டுள்ளது. ஜனதா தளத்தின் சின்னமும் முடக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தால் சிவசேனாவின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தவிடாமல் மட்டும் தான் தடுக்க முடியும். கட்சி உயிரோடு தான் இருக்கும். சிவசேனா பெயரையும், வில், அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணியால் எளிதில் பெற்றிபெற முடியாது. தற்போது மகாராஷ்டிராவில் அதிகம் வெறுக்கப்படும் நபர் ஏக்நாத் ஷிண்டே.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பத்ரா சால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

Tags:    

Similar News