இந்தியா

தெலுங்கானா முதல் மந்திரியாக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி

Published On 2023-12-07 08:12 GMT   |   Update On 2023-12-07 08:12 GMT
  • கவர்னரை சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
  • ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று முன்தினம் டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் தெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டியை ஒருமனதாக தேர்வு செய்தனர்.

இதற்கான அதிகார அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கவர்னரை சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். 

அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News