இந்தியா

கே.ஆர்.எஸ். அணை (கோப்பு படம்) 

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு- காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2022-07-10 05:30 IST   |   Update On 2022-07-10 05:30:00 IST
  • தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு.
  • கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 34,304 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.நேற்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 15,727 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News