இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலி: உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரெட் அலெர்ட்
- உத்தரபிரதேச மாநில போலீசார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படும்படி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
- உத்தரபிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில போலீசார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படும்படி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.