இந்தியா

திருப்பதியில் ஆய்வு மேற்கொள்ளும் அயோத்தி கோவில் நிர்வாகிகள்

Published On 2024-01-31 05:33 GMT   |   Update On 2024-01-31 05:33 GMT
  • தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த அயோத்தி கோவில் தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
  • சபரிமலைக்குச் சென்று பார்வையிட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி:

அயோத்தி ராமரை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த அயோத்தி கோவில் தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பி தரிசனம் வைப்பது குறித்து திருப்பதி, சபரிமலை மற்றும் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

சில நாட்களில் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக தினமும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை ஒழுங்குபடுத்துதல் அவர்களின் வாகனங்களை போக்குவரத்து இடைஞ்சல் இல்லாத இடங்களில் பார்க்கிங் செய்வது, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.


விரைவில் திருப்பதிக்கு வர உள்ள அயோத்தி தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் சமையலறை, பிரசாதம் விநியோகிக்கும் முறைகள் மேலும் மலைப்பாதையில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து சபரிமலைக்குச் சென்று பார்வையிட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News