இந்தியா

தப்பித்து விடலாம் என்று நினைக்காதீர்கள்... 100 சதவீத ஆதாரம் இருக்கிறது - தேர்தல் கமிஷனுக்கு ராகுல் எச்சரிக்கை

Published On 2025-07-25 07:47 IST   |   Update On 2025-07-25 07:47:00 IST
  • தேர்தல் கமிஷன், இந்திய தேர்தல் கமிஷனாக செயல்படவில்லை.
  • அதற்கு எங்கள் கட்சியிடம் 100 சதவீதம்

புதுடெல்லி:

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சர்ச்சையை எழுப்பிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தல் கமிஷன், இந்திய தேர்தல் கமிஷனாக செயல்படவில்லை. அது தனது பணியை செய்யவில்லை.

கர்நாடகாவில் ஒரு தொகுதியில் தேர்தல் கமிஷன் மோசடியை அனுமதித்துள்ளது. அதற்கு எங்கள் கட்சியிடம் 100 சதவீதம் உறுதியான ஆதாரம் இருக்கிறது. 90 சதவீதம் அல்ல. அதை உங்களிடம் காண்பிக்க நாங்கள் முடிவு செய்யும்போது, அது 100 சதவீத ஆதாரமாக இருக்கும்.

நாங்கள் ஒரு தொகுதியை மட்டும் ஆய்வு செய்து இதை கண்டுபிடித்துள்ளோம். தொகுதிதோறும் இந்த நாடகம்தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களது வயது என்ன தெரியுமா? 45, 50, 60, 65 என்று இருக்கிறது. அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரே தொகுதியில் உள்ளனர். அவர்களை பிடித்து விட்டோம்.

நான் தேர்தல் கமிஷனுக்கு சொல்லிக் கொள்கிறேன். இதில் இருந்து தப்பித்து விடலாம் என்று நீங்களோ, உங்கள் அதிகாரிகளோ நினைத்தால், அது தவறாகி விடும்.

ஏனென்றால், நாங்கள் உங்களிடம் வரப்போகிறோம். நீங்கள் இதிலிருந்து தப்ப முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News