இந்தியா

ராகுல் காந்தி

காஷ்மீர் பண்டிட்டுகள் பாதுகாப்பு - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

Published On 2023-02-03 18:55 GMT   |   Update On 2023-02-03 18:55 GMT
  • காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
  • அங்கு காஷ்மீர் பண்டிட்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி சமீபத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். இறுதிக்கட்டமாக காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி அங்கு காஷ்மீர் பண்டிட்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து தப்பி ஓடிய காஷ்மீர் பண்டிட் ஊழியர்களை ஜம்மு பகுதியில் உள்ள அதிகாரிகள் மீண்டும் பள்ளத்தாக்குக்கு திரும்பி வேலையைத் தொடரும்படி வற்புறுத்தப்படுகின்றனர்.

அரசு அதிகாரிகள் தங்களை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வேலைக்குச் செல்லும்படி வற்புறுத்துவதாக காஷ்மீர் பண்டிட் பிரதிநிதிகள் என்னிடம் கூறினார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு பாதுகாப்பு நிலைமை சரியாக இல்லாதபோது அவர்களைத் திருப்பி அனுப்புவது கொடூரமான செயல்.

நிலைமை மேம்படும் வரை இந்த காஷ்மீரி பண்டிட் ஊழியர்களின் சேவைகளை மற்ற நிர்வாக மற்றும் பொது வசதிகளில் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகளின் செய்தியை உங்களுக்கு எடுத்துச் செல்ல என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன் என்று காஷ்மீரி பண்டிட் சகோதர, சகோதரிகளுக்கு உறுதியளித்தேன்.

எனவே நிலையை உணர்ந்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News