இந்தியா

ராகுல் காந்திக்கு குளத்தில் குதிப்பதைவிட வேறு வழியில்லை: ராஜ்நாத் சிங் கிண்டல்

Published On 2025-11-05 19:12 IST   |   Update On 2025-11-05 19:12:00 IST
  • வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
  • அவர் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியலமைப்பு அமைப்புகளை டார்கெட் செய்கிறார்.

பீகார் மாநில தேர்தலுக்கான பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வாக்குகளுக்காக பிரதமர் மோடி நடனம் கூடி ஆடுவார். வாக்காளர்கள் கேட்டுக்கொண்டால் யோகா கூட செய்வார் என விமர்சனம் செய்திருந்தார். மேலும், மீனவர்களுடன் குளத்தில் குதித்து நீச்சல் அடித்ததுடன், மீன் பிடித்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்துள்ளார். "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குளத்தில் குதிப்பதைவிட வேறு வழியில்லை. வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். அவர் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியலமைப்பு அமைப்புகளை குறிவைக்கிறார்" என்றார்.

மேலும், "ராகுல் காந்திக்கு என்ன நிகழ்ந்தது. அவர் பாதுகாப்புப்படையில் இடஒதுக்கீடு பிரச்சினையை எழுப்புகிறார். பாதுகாப்புப்படைகளில் இடஒதுக்கீடு கோரிக்கை வைத்து நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்" என்றார்.

Tags:    

Similar News