இந்தியா

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

Published On 2025-05-06 15:25 IST   |   Update On 2025-05-06 15:25:00 IST
  • முஸ்லீம்கள், காஷ்மீரிகள் மீது வெறுப்பு கொள்ள வேண்டாம் என்று ஹிமான்சி தெரிவித்ததால் அவர் மீது வெறுப்பு பிரச்சாரம் நடக்கிறது.
  • தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

ஜம்மு-காஷ்மீரின் பகல்கா மில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உள்பட 26 பேர் உயிரிழந்தனா்.

கடற்படை அதிகாரியான வினய் நர்வாலும், அவரது மனைவி ஹிமான்ஷியும் திருமணம் முடிந்து சுற்றுலா சென்ற நிலையில் அவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, "யார் மீதும் வெறுப்பு இருக்கக் கூடாது. முஸ்லீம்கள், காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பை உமிழ்வதை நான் பார்க்கிறேன். நாங்கள் இதை விரும்ப வில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்" என்று ஹிமான்ஷி பேட்டி அளித்து இருந்தார்.

இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து ஹிமான்ஷிக்கு ஆதரவு தெரிவித்தும், அவருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கண்டித்தும் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் குடும்பத்தினரை பாராளுமன்ற மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.

இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து அரியானா மாநிலம் கர்னலுக்கு ராகுல் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஹிமான்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். 

Tags:    

Similar News