இந்தியா

25 கிலோ தங்க நகை அணிந்து வந்து ஏழுமலையானை தரிசித்த தொழிலதிபர்

Published On 2024-08-24 12:53 IST   |   Update On 2024-08-24 12:53:00 IST
  • தொழில் அதிபர் குடும்பம் 25 கிலோ தங்கத்தை அணிந்து செல்லும் வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  • பெரியவர்களுடன் ஒரு குழந்தை நிற்பதை காணலாம்.

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு நேற்று மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் குடும்பம் 25 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்தனர்.

இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தொழில் அதிபர் குடும்பம் 25 கிலோ தங்கத்தை அணிந்து செல்லும் வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

வீடியோவில் நான்கு பேர் கொண்ட குடும்பம் நிற்பதை காணலாம். வெள்ளை வேட்டி அணிந்தபடி இரண்டு ஆண்கள் கழுத்தில் தடிமனான தங்க நகைகளுடன் காணப்படுகிறார்கள்.

மேலும் தங்க நிற சேலையில் நகைகள் அணிந்தபடி ஒரு பெண்ணை காணலாம். பெரியவர்களுடன் ஒரு குழந்தை நிற்பதையும் காணலாம்.

வீடியோவில் தொழில் அதிபர் குடும்பம் குடும்பம் போலீஸ்காரருடன் கோவில் வளாகத்திற்குள் நடந்து செல்வதை காண முடிகிறது.

Tags:    

Similar News