இந்தியா
null

வருங்கால வைப்பு நிதி: தானியங்கி முறையில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

Published On 2025-06-26 05:00 IST   |   Update On 2025-06-26 05:00:00 IST
  • எவ்வித சான்றிதழ்களும் இன்றி தானியங்கி முறையில் முன்பணம் எடுக்கலாம்.
  • Auto Claim வரம்பை மத்திய அரசு 5 மடங்கு உயர்த்தியுள்ளது.

வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான Auto Claim (தானியங்கி) வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளபடி, இனி நீங்கள் ரூ.5 லட்சம் வரை எவ்வித சான்றிதழ்களும் இன்றி தானியங்கி முறையில் முன்பணம் எடுக்கலாம்.

உடல்நலக் குறைவு, வீட்டுக் கடன் அல்லது திருமணம் போன்ற அவசரத் தேவைகளுக்காக இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

ஆட்டோ கிளைம் வரம்பை 5 மடங்கு உயர்த்தும் மத்திய அரசின் முடிவு, அவசரத் தேவைகளுக்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிஎஃப் சந்தாதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 

Tags:    

Similar News