இந்தியா

அமெரிக்க தொழிலதிபருடன் காங்கிரசுக்கு தொடர்பா?: மடத்தனம் என்கிறார் பிரியங்கா

Published On 2024-12-10 14:34 IST   |   Update On 2024-12-10 14:34:00 IST
  • அவையில் எதிர்க்கட்சியில் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
  • அதானி விவகாரத்தை விவாதிக்க அவர்கள் பயப்படுகின்றனர் என்றார் பிரியங்கா.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் அதானி விவகாரம் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் சோரஸ் விவகாரம் ஆகியவை எதிரொலித்தது. இதையடுத்து, அவையில் எதிர்க்கட்சியில் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வயநாடு எம்பியான பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதானி விவகாரத்தை விவாதிக்க அவர்கள் பயப்படுகின்றனர். நான் பாராளுமன்றத்திற்கு புதியவர். ஆனால் இதுவரை பிரதமரை பாராளுமன்றத்தில் காணவில்லை. இந்தப் பிரச்சனையை நாம் ஏன் எழுப்பக் கூடாது?

அப்போது, அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் சோரோசுடன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளது என்ற பா.ஜ.க.வினரின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, இது அவர்கள் கொண்டு வரக்கூடிய மிகவும் அபத்தமான விஷயம். அவர்கள் 1994-ம் ஆண்டு விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள், அதைப் பற்றி யாரிடமும் எந்த பதிவும் இல்லை. என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதானி பிரச்சனையை விவாதிக்க விரும்பாததால் தான் இப்படி செய்கிறார்கள் என காட்டமாக தெரிவித்தார்.

Tags:    

Similar News