இந்தியா

ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்து விபத்து.. 20 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல் - இழப்பீடு அறிவிப்பு

Published On 2025-10-15 01:22 IST   |   Update On 2025-10-15 01:22:00 IST
  • தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
  • பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ராஜஸ்தானில் தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில்10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.

சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பலர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதவில், "ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகவும் துயரமடைந்துள்ளேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி (PMNRF) இலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News