இந்தியா

(கோப்பு படம்)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரம்மாண்ட சிலை- பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்

Published On 2022-09-07 18:57 GMT   |   Update On 2022-09-07 18:57 GMT
  • மின் ஒளி வடிவ சிலைக்கு பதில், 28 அடி உயர கிரானைட் கல் சிலை அமைப்பு.
  • நேதாஜியின் வாழ்க்கை குறித்த கண்காட்சி இடம் பெறுகிறது.

இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 23ந் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். முன்னதாக நேதாஜிக்கு அதே இடத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மோனோலித்திக் கிரானைட் கற்களால் 28 அடி உயரமுள்ள நேதாஜி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட் பகுதியில் மின்ஒளி வடிவில் இருந்த சிலைக்கு பதில் புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

இதற்கிடையே நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் நாளை முதல் 11ந் தேதிவரை இரவு எட்டு மணிக்கு இடம் பெற உள்ளது. இதனைப் பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News