சாத் பூஜை: மக்கள் குளிக்க அழுக்கு நீர்... பிரதமர் மோடி குளிக்க சுத்தமான நீர் - வைரலாகும் வீடியோ
- இந்த ஆண்டின் சாத் பூஜை கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது.
- சாத் பூஜையையொட்டி யமுனா நதியில் பொதுமக்கள் நீராடவுள்ளனர்.
வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டின் சாத் பூஜை கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர். சாத் பூஜையையொட்டி யமுனா நதியில் பொதுமக்கள் நீராடவுள்ளனர்.
இந்நிலையில், யமுனை ஆற்றில் அருகே பிரதமர் மோடி நீராடுவதற்கு பிரத்யேக குளம் தயார் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யமுனை ஆற்றில் மக்கள் குளிக்கும் நீர் கருப்பு நிறத்தில் குளிப்பதற்கு தகுதியில்லாத நிலையில் உள்ளதும் பிரதமர் மோடி குளிக்கும் குளத்தின் நீர் நல்ல தரத்தில் இருப்பதும் பிபிசி வெளியிட்டுள்ள வீடியோவில் அம்பலமாகியுள்ளது.
பிரதமர் மோடி நீராடுவதற்கு பிரத்யேக குளம் தயார் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.