இந்தியா

மிசோரம் சட்டசபை தேர்தல்: 70 சதவீதம் வாக்குகள் பதிவு

Published On 2023-11-07 12:35 GMT   |   Update On 2023-11-07 12:35 GMT
  • மிசோரமில் மதியம் 3 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்தது. அங்கு 69.87 சதவீதம் வாக்குகள் பதிவானது.
  • மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 9 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஐஸ்வால்:

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு ம், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 20 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் அதிகாலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்பு நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்பதிவு தொடங்கியதும் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.57 லட்சம் பேர் வாக்கு உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக 40 தொகுதிகளிலும் 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், மிசோரமில் மதியம் 3 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்தது. அங்கு 69.87 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 9 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News