இந்தியா

முதல்வர் சித்தராமையா அடிக்க கை ஓங்கிய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

Published On 2025-07-18 06:51 IST   |   Update On 2025-07-18 06:51:00 IST
  • நாராயண் பரமணி ஐபிஎஸ்-ஐ மேடையில் வைத்து அடிக்க கை ஓங்கினார்.
  • தான் அவமானப்பட்டதாக கூறி சமீபத்தில் நாராயண் விருப்ப ஓய்வு கோரினார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த ஏப்ரல் மாதம் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) நாராயண் பரமணி ஐபிஎஸ்-ஐ மேடையில் வைத்து அடிக்க கை ஓங்கினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் அவமானப்பட்டதாக கூறி சமீபத்தில் நாராயண் விருப்ப ஓய்வு கோரினார்.

ஆனால் முதல்வர் சித்தமையா மற்றும் பிற அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் முடிவை மாற்றினர்.

இந்நிலையில் நாராயண் பரமணி நேற்று (வியாழக்கிழமை) பெலகாவி நகர துணை காவல் ஆணையராக (டிசிபி) நியமிக்கப்பட்டார்.

காவல் துறையில் 31 ஆண்டுகள் பணியாற்றியுள்ள நாராயண் ஓய்வு பெற இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன.  

Tags:    

Similar News