இந்தியா
உடலில் கீறிய வளர்ப்பு நாய் - அலட்சியத்தால் ரேபிஸ் பாதித்து காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
- காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது.
- வனராஜ் மஞ்சாரியா தனது வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தார்.
நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வளர்ப்பு நாயின் நகம் கீறியதால் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது. ஆனால் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார். இதன் காரணமாக ரேபிஸ் நோய் பாதித்து அவர் உயிரிழந்துள்ளார்.