இந்தியா

சபரிமலை தந்திரியாக கண்டரரு ராஜீவரு நீடிக்க வேண்டுமா? ஆய்வு செய்ய இருப்பதாக TDB உறுப்பினர் தகவல்

Published On 2026-02-07 10:41 IST   |   Update On 2026-02-07 10:41:00 IST
  • தங்கம் மாயமான வழக்கில் தந்திரி மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
  • 16-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் புதிதாக தங்கத் தகடுகள் பதிக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது கிலோ கணக்கில் தங்க நகை மாயமானது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ண போற்றி என்பவர் முதல் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் சபரிமலை முதன்மை தந்திரி கண்டரரு ராஜீவரு அடங்குவார்.

இவர் உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாகவும், இந்த பணத்தை திருவல்லாவில் இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கண்டரரு ராஜீவரு சபரிமலை தந்திரியாக தொடர வேண்டுமா? என்பது குறித்து TDB ஆராயும் என போர்டு உறுப்பினரான வழக்கறிஞர் பி.டி. சந்தோஷ் கமார் தெரிவித்துள்ளார்.

தங்கம் மாயமான வழக்கில் தந்திரி மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இது பக்தர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர் தொடர்ந்து தந்திரியாக செயல்பட முடியுமா? என்பது குறித்து ஆராயப்படும்.

போர்டு இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன், கேரளா உயர்நீதிமன்றத்தின் பார்வையை பரிசீலனை செய்யும். TDB எப்போதும் பக்தர்களுக்காகவே உள்ளது. அவர்களின் நம்பிக்கை மற்றும் சபரிமலையின் வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாப்பதற்கான நிலையை எடுக்கும் என்றார்.

தங்க நகை மாயமான வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு 16-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News