இந்தியா

திருமண வாழ்க்கையை பாதுகாக்க போக்சோ வழக்கை ரத்து செய்யலாம்: இமாச்சல் உயர்நீதிமன்றம்

Published On 2023-12-14 05:43 GMT   |   Update On 2023-12-14 05:43 GMT
  • ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது.
  • ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால் இது மேலும் குற்றத்தை தூண்டுவதற்கு வகை செய்யும் என நீதிபதி வீரேந்திர சிங் ஒரு வழக்கில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் இமாச்சல பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால், வழக்கை ரத்து செய்யலாமா? என்பது முடியுமா? என்பது குறித்து கருத்து தெரிவித்தது.

அப்போது நீதிபகள் தர்லோக் சிங் சவுகான், சத்யன் வைத்யா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் கூறிய கருத்து பின்வருமாறு:-

போக்சே சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்டவரும் திருமணம் செய்து கொள்ள உண்மையிலேயே சமரசத்திற்கு முன்வந்தால், அவர்களின் திருமண வாழ்க்கையை பாதுகாக்க போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யலாம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதிப்பது, உண்மையிலேயே தம்பதியின் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். நீதியும் இதரப்பினரை சமரம் செய்து கொள்ள அனுமதிக்க கோரும்.

ஆனால், தண்டனையில் இருந்து தப்புவதற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டது அவர் தானாகவே எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது, ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை தீர்த்துக் கொண்டார்கள் என்ற அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இறுதியில் ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைச் சுற்றியே சுழல்கிறது. எனவே, நேரான எந்தவித சூத்திரத்தாலும் உருவாக்க முடியாது.

இருந்தபோதிலும் பயங்கரமான, கொடூரமான பாலியல் குற்றங்கள் ஒருபோதும் சமரசத்தின் விசயமாக இருக்க முடியாது.

Tags:    

Similar News