இந்தியா
என்டிஏ பாராளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது
- பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
- பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
18வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது.
நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகிறார்கள். இதனால் பாராளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.