இந்தியா

விமான விபத்து - அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி

Published On 2025-06-13 07:39 IST   |   Update On 2025-06-13 07:39:00 IST
  • விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உயிரிழந்துள்ளார்.
  • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார்.

இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உயிரிழந்துள்ளார்.

அகமதாபாத்தில் 242 பேருடன் சென்று விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் டாடா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். எனவே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

உலகையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தலைவர்கள் கடும் அதிர்ச்சி வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி இன்று காலை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News