இந்தியா

பிரதமர் மோடி

ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடி பங்கேற்பு

Published On 2023-06-14 20:02 GMT   |   Update On 2023-06-14 20:02 GMT
  • பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
  • ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் யோகா தினம் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.

இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மறுநாளான 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு அதிபர் ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார். அதற்கடுத்த நாள் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகின்றனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அமெரிக்கா, இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Tags:    

Similar News