இந்தியா
பிரதமர் மோடி
மனதின் குரல் 100வது நிகழ்ச்சி - பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
- பிரதமர் மோடி மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
- பிரதமரின் இந்த நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மனதின் குரல் என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. காலை 11:00 முதல் 11:30 மணி வரை ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றுவார். அது, 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்பப்பட உள்ளது.