இந்தியா

பாக். எத்தனை ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்- ரேவந்த் ரெட்டி

Published On 2025-05-29 20:54 IST   |   Update On 2025-05-29 20:54:00 IST
  • எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை.
  • எங்களுக்கு கணக்கு கொடுங்கள் என ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக குறிவைத்து தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. அதில் ரஃபேல் விமானங்களும் அடங்கும் எனக் குறிப்பிட்டிருந்தது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் கூறியதை மறுத்தது.

தற்போது இந்திய பிரதமர் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பேசுகிறார்.

இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் சண்டையில் பாகிஸ்தான் எத்தனை ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

செகந்திராபாத் கண்டோன்மென்ட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் பங்கேற்றனர். தெலுங்கானாவில் தயாரிக்கப்படும் போர் விமானங்கள் நம் நாட்டின் மீதான மரியாதையை நிலைநிறுத்துகின்றன. நரேந்திர மோடி கொண்டு வந்த ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை.

சமீபத்திய சண்டையின்போது பாகிஸ்தானால் எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு கணக்கு கொடுங்கள்.

இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News