இந்தியா

பிரதமர் மோடி,சூரத் பேரணி

தேசிய கொடி ஏற்றும் இயக்கத்தில் பொதுமக்களின் பங்கேற்பு புதிய இந்தியாவை வலுப்படுத்தும்- பிரதமர் மோடி

Published On 2022-08-10 19:22 GMT   |   Update On 2022-08-10 19:22 GMT
  • மூவண்ண தேசிய கொடி இந்திய பன்முகத் தன்மையின் சின்னம்.
  • நமது மூவண்ணக்கொடி கடந்த காலத்தின் பெருமை.

சூரத்:

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற மூவண்ணக்கொடி பேரணியில், காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவருக்கும், சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவின் வாழ்த்துகள். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு இன்னும் சில தினங்களில், கொண்டாடப்பட உள்ளது.

நாடு முழுவதும் மூலை,முடுக்கெல்லாம் மூவண்ணக்கொடி ஏற்றி, வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு நாம் அனைவரும் தயாராகி வருகிறோம்.  


சூரத்தில் நடைபெற்ற மூவண்ணக்கொடி பேரணியில், ஒரு சிறிய இந்தியாவை காண முடிகிறது. சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் இணைந்து இதில் ஈடுபட்டுள்ளனர் மூவண்ணக் கொடியின் உண்மையான ஒற்றுமை உணர்வை சூரத் வெளிப்படுத்தி உள்ளது.

நமது தேசியக் கொடியே நாட்டின் காதி மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக உள்ளது. இந்திய தேசிய கொடியில் மூன்று நிறங்கள் மட்டுமல்ல, நமது கடந்த காலத்தின் பெருமை, நிகழ்காலத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் எதிர்கால கனவுகளின் பிரதிபலிப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளது.

நமது மூவண்ணக்கொடி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் சின்னம். சுதந்திரத்தில் ஈடுபட்ட போராளிகள், மூவண்ணக்கொடியில் நாட்டின் எதிர்காலம் குறித்த கனவையும் கண்டனர்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய இந்தியாவுக்கான பயணத்தை தொடங்கும்போது, மூவண்ணக்கொடி இந்தியாவின் ஒற்றுமையையும், உணர்வையும் மீண்டும் பிரதிபலிக்கிறது.

வீடு தோறும் தேசிய கொடியை ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தில் பொதுமக்களின் பங்கேற்பு புதிய இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News