இந்தியா

விமான விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

Published On 2025-06-13 11:00 IST   |   Update On 2025-06-13 11:53:00 IST
  • விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக அவர் அந்த வழியாக குதித்ததன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.
  • கண், நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்த ரமேஷ் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில், அதில் பயணித்த 241 பயணிகள் பலியாகிவிட்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற வாலிபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

விமானம் வெடித்து சிதறியதால் அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில், விஷ்வாஸ் குமார் தப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

விமானத்தில் இருந்து குதித்து அவர் உயிர் தப்பி உள்ளார். அவருக்கு முகம், கால்கள், மார்பு உள்ளிட்ட உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரமேஷ் அமர்ந்திருந்த இருக்கை விமானத்தில் இருந்து உடைந்து விழுந்ததால் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயம் அடைந்த அவர், அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு சென்று, விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான ரமேஷ் விஷ்வாஸ் குமாரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

Tags:    

Similar News