இந்தியா
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா?: பிரதமர் மோடி ஆவேசம்
- உத்தரகாண்டில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- அப்போது பேசிய அவர், ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர் என்றார்.
ருத்ராபூர்:
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் பாஜக ஏற்பாடு செய்திருந்த வாகனப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும்.
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா?
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர்
கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் என தெரிவித்தார்.