இந்தியா

மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம்: பிரதமர் மோடி பேச்சு

Published On 2025-09-13 14:38 IST   |   Update On 2025-09-13 14:38:00 IST
  • வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.
  • மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

இந்த நிலையில் 8500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மற்றும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான இன்று மணிப்பூர் சென்றார். சூரசந்த்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

* மணிப்பூர் வீர் நிறைந்த பூமி.

* இம்பாலில் இருந்து சாலை வழியாக சூரசந்த்பூருக்குச் செல்லும் வழியில் எனக்குக் கிடைத்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

* இன்று திறக்கப்பட்ட திட்டங்கள் மணிப்பூரில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.

* 2014 முதல், மணிப்பூரில் இணைப்பை மேம்படுத்துவதற்கு நான் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

* இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.

* மணிப்பூரில் ரெயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது:

* வளர்ச்சிக்கு அமைதி மிக முக்கியம்

* உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

* வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.

* மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். நான் இந்த மாநில மக்களுடன் இருக்கிறேன்.

* மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.

* முன்னதாக, டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவுகள் மணிப்பூரை எட்ட பல தசாப்தங்கள் ஆனது, ஆனால் இப்போது மணிப்பூர் நாட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News