இந்தியா

குஜராத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

Published On 2025-06-12 14:12 IST   |   Update On 2025-06-12 14:42:00 IST
  • விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வருகிறது.
  • விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா AI 171 என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News