இந்தியா

இமாச்சல பிரதேசத்திற்கு ஒடிசா அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி

Published On 2023-09-02 19:12 GMT   |   Update On 2023-09-02 19:12 GMT
  • இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
  • ஒடிசா அரசு சார்பில் இமாச்சலுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி தெரிவித்தார்.

புவனேஷ்வர்:

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதல் மந்திரி சுக்வீந்தர் சிங்கிற்கு, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கடிதம் எழுதினார்.

அப்போது, இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக ஒடிசா அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News