இந்தியா

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா- நடிகை பரினீதி சோப்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை

Published On 2025-10-19 21:34 IST   |   Update On 2025-10-19 21:34:00 IST
  • ராகவ் சதா- நடிகை பரினீதி சோப்ரா கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
  • இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை பிறந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

பரினீதி சோப்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில் "இப்போ அவன் வந்துட்டான்! எங்களுடைய பையன்.

முன்பு வாழ்ந்த வாழ்க்கையை நம்மால் நினைவில் கொள்ளவே முடியாது! கைகள் நிரம்பியுள்ளன, எங்களுடைய இதயங்கள் நிறைந்துள்ளன. முதலில் நாங்கள் ஒருவருக்கொருவதாக இருந்தோம். இப்போது எங்களுக்கு எல்லாம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News