பஹல்காம் தாக்குதல் - பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு..
- தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படத்தை பாதுகாப்புப் படையினர் இன்று வெளியிட்டனர்.
இவர்கள் ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) அமைப்பை சேர்நதவர்கள் என்று தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் ஓவியங்களையும் பாதுகாப்பு படையினர் வெளியிட்டனர்.
அதிகாலையில், பயங்கரவாதிகளில் ஒருவரின் முதல் படமும் ஆன்லைனில் வெளியானது. அந்தப் படத்தில் பயங்கரவாதி ஏகே-47 துப்பாக்கியை வைத்திருப்பதைக் காட்டுகிறது.