இந்தியா
இமயமலையில் விரிவடையும் பனிப்பாறை ஏரிகள் - திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
- இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன.
- இதில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.
இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இமயமலையின் இந்திய பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன.
இந்தப் பகுதிகளில் பனிப்பாறை ஏரிகள் விரிவடைவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.