இந்தியா
RTI சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு சட்ட பிரிவை நீக்க வேண்டும்: இந்தியா கூட்டணி
- டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு சட்டத்தின் 44 (3) பிரிவு RTI-யை நீர்த்துக்பொகச் செய்யும் வகையில் உள்ளது.
- சட்டமானது தனிநபர் உரிமை, ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் நாம் விரும்பும் தகவலை பெற முடியும்.
ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது டிஜிட்டல் தரவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுள்ளது. இந்த சட்டமானது தனிநபர் உரிமை, ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், இதில் உள்ள சட்டப்பிரிவு 44 (3) ஆர்.டி.ஐ. சட்டத்தை நீர்த்துக்பொகச் செய்யும் வகையில் உள்ளது. இந்த பிரிவை தீரும்பப் பெற வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கவுரவ் கோகாய், ஜான் பிரிட்டாஸ், எம்.எம். அப்துல்லா, பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் அரசுக்கு மனு கொடுத்துள்ளனர்.